search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குநர் விஜய்"

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.

    பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.



    படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,

    "நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    தேவி 2 படத்தின் டிரைலர்:

    தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். #Thalaivi #KanganaRanaut
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கங்கனா ஜெயலலிதவாக நடிப்பதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பிரியதர்ஷினி இயக்கும் த அயர்ன் லேடி படத்துக்காக ஜெயலலிதாவாகவே மாறி இருந்த நித்யா மேனன் தோற்றத்தை எடுத்து பகிர்ந்து இதுபோல இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ‘ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம்.



    தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம்.

    இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார்.

    இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்.”

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தப் படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். #Thalaivi #Jaya #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
    ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

    அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.



    இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

    கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.



    ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.



    காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Watchman #GVPrakashKumar
    தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது.

    விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த வீட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழிவர்மன் படம் பற்றி கூறும்போது ‘நாயை பார்த்து பயப்படும் ஒரு இளைஞனுக்கு ஒரு நாயுடன் இரவு முழுக்க தங்க நேரிடுகிறது.



    அந்த நாய் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியாமல் அதை பார்த்து பயப்படுகிறான். இதுதான் கதை. படம் முழுக்க சிரிக்கவும் வைக்கும். திகில் அடையவும் வைக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி இருக்கிறது. கோடை விடுமுறையின் தொடக்கமான 12-ந் தேதி ரிலீசாகிறது’. இவ்வாறு அவர் கூறினார். #Watchman #GVPrakashKumar

    இயக்குநர் விஜய், நடிகை அமலாபாலுடன் விவாகரத்து பெற்ற நிலையில், விஜய்யும், நடிகை சாய் பல்லவியும் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலுக்கு விஜய் விளக்கம் அளித்துள்ளார். #DirectorVijay #SaiPallavi
    மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர்.

    விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய படங்களை ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. கங்கனா ரணாவத் நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தையும் இயக்க தயாராகி உள்ளார். இந்த நிலையில் விஜய்க்கும், நடிகை சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.



    சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர். விஜய் இயக்கிய தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

    விஜய்க்கும், சாய் பல்லவிக்கும் ‘தியா’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறும்போது, “என்னையும், சாய் பல்லவியையும் இணைத்து வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. பட வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்” என்றார். #DirectorVijay #SaiPallavi

    விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற தலைப்பில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.

    இதில் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.

    இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.



    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவி படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது. #Thalaivi #KanganaRanaut

    விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாகவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic
    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.

    இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். 



    விஜய் இந்த படத்தை ஒரே நேரத்தில் இந்தியிலும் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த படத்திற்கு ‘ஜெயா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.

    ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்று வருகிறேன்’’.

    இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படக்குழு சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை கிண்டல் செய்துள்ளது. #WatchMan #GVPrakashKumar
    பிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த நானும் காவலாளிதான் என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.

    இதை தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர்.



    இதற்கு நாடு முழுக்க வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில் நாய் ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் வெளியிடப்பட்டுள்ளது.

    வாட்ச்மேன் என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த போஸ்டருக்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #WatchMan #GVPrakashKumar #Chowkidar 

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Devi2 #Prabhudeva
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். 

    நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஜி.வி.பிலிம்ஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்க, அயனன்கா போஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Devi2 #Prabhudeva

    ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தை இயக்கும் முயற்சியில் பல்வேறு இயக்குநர்களும் இறங்கியிருக்கும் நிலையில், விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று தலைப்பு வைத்துள்ளனர். #Thalaivi #JayalalithaaBiopic
    விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் `தலைவி' என்ற பெயரில் உருவாகுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    படம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது,

    "தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளை பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களை பெற்றவர். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனேயே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என்றார்.



    விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார். பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. #Thalaivi #JayalalithaaBiopic #Vijay #GVPrakashKumar #NiravShah

    ×